தூத்துக்குடி – மே -07,2025
Newz – Webteam

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறை சார்பாக உருவாக்கப்பட்ட “திரு” என்னும் திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வு குறும்படத்தின் இயக்குநர் மற்றும் கலைஞர்களுக்கு பாராட்டு விழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் “திரு” என்னும் திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வு குறும்படம் காவல்துறை சார்பாக உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது. மேற்படி குறும்படத்தை உருவாக்கிய அதன் இயக்குநர் மற்றும் அனைத்து கலைஞர்களுக்கும் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் குறும்படம் திரையிடப்பட்டு பின்னர், அதன் இயக்குநர் அருந்ததி அரசு மற்றும் குறும்படத்தின் அனைத்து கலைஞர்களுக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.
இந்நிகழ்வின் போது தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் ஆறுமுகம், தீபு உட்பட காவல்துறையினர் மற்றும் குறும்படத்தின் அனைத்து கலைஞர்களும் உடனிருந்தனர்.
0 Comments