
கோயம்புத்தூர் – ஜீன் -25,2025
Newz – Webteam
இரவு ரோந்து பணியில் விழிப்புடன் சிறப்பாக செயல்பட்ட காவலர்கள்: கையும் களவுமாக பிடிபட்ட திருடர் – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு
கோவை மாவட்டம், பேரூர் உட்கோட்டத்தில் குற்றங்களைத் தடுக்கும் நோக்கில், பேரூர் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் அமைந்துள்ள தனிப்படை போலீசார் தினசரி இரவு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம்.
இன்றைய தினம் 24,ம்தேதி அதிகாலை நடைபெற்ற ரோந்து பணியின் போது, சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் ஒருவரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவனது பெயர் இளங்கோவன் என்றும் அந்நபருக்கு பேரூர் மற்றும் தொண்டாமுத்தூர் காவல் நிலையங்களில் சம்மந்தப்பட்ட
இருசக்கர வாகன திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் என்றும் தெரியவந்தது மேலும் அவரிடமிருந்து இரண்டு வாகனங்கள் மீட்கப்பட்டன.
மேலும் விசாரணையில், மேற்படி நபர் தொண்டாமுத்தூர் பகுதியில் வசிக்கும் நபரிடமிருந்து வாகனங்களை திருடியதால் அவரை தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டது.
இந்த சிறப்பான காவல் நடவடிக்கையை பாராட்டி, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. K. கார்த்திகேயன், இ.கா.ப., இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் இரவு ரோந்து பணியில் சிறப்பாக ஈடுபட்ட தலைமை காவலர் சரவணன் மற்றும் காவலர்களான . காதர் ஷெரிப் அறிவுநிதி ஆகியோரை நேரில் சந்தித்து பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி, அவர்களின் விழிப்புணர்வும், பொறுப்புணர்வும் கொண்ட பணியை பாராட்டினார்.
0 Comments