கன்னியாகுமரி -ஆகஸ்ட் -21,2024
Newz -webteam



பல்வேறு சிக்கலான குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்வதில் முக்கிய பங்காற்றிய போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு
குமரி மாவட்டத்தில் கொலை, கொள்ளை,திருட்டு சம்பவங்களை தடுப்பதிலும், ஏற்கனவே நடந்த சம்பவங்களில் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்வதிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சுந்தரவதனம் IPS அவர்கள் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் இன்று பல்வேறு கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய
குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதில் முக்கிய பங்களிப்பினை ஆற்றிய கன்னியாகுமரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ் குமார், சுசீந்திரம் காவல் ஆய்வாளர் ஆதம் அலி மற்றும் உதவி ஆய்வாளர்கள் மோகன ஐயர், ஆறுமுகம், ரகு பாலாஜி, மற்றும் தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டி சான்றிதழ் மற்றும் பண வெகுமதி வழங்கினார்
0 Comments