கன்னியாகுமரி – ஜீன் – 15,2023
newz – webteam
பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வீடியோ எடுத்து மிரட்டிய காசிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு. இவ்வழக்கின் விசாரணை அதிகாரிகளை நேரில் பாராட்டிய கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வீடியோ எடுத்து மிரட்டியதாக 2020 ஆம் ஆண்டு காசி மீது கோட்டார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு முதல் கட்ட விசாரணைக்கு பின்னர் இவ்வழக்கானது சிபிசிஐடி க்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது
இவ்வழக்கில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடித்து காசிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கில் சிறந்த முறையில் பணியாற்றி குற்றவாளியை கைது செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, தண்டனை வாங்கிக் கொடுக்க காரணமாக இருந்த விசாரணை அதிகாரிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.N. ஹரி கிரன் பிரசாத் IPS நேரில் வரவழைத்து பாராட்டினார்
0 Comments