மயிலாடுதுறை – ஜீலை -05,2024
Newz – webteam
கொலை வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டது – மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை.
இன்று மயிலாடுதுறை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா கொலை வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி வழங்கினார்.
- பாலையூர் காவல் சரகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் இறந்த தக்காளி (எ) சரவணன் என்பவரது தந்தை திரு. சேகர், தாயார் திருமதி. செந்தமிழ்ச்செல்வி ஆகியோருக்கு பாதிக்கப்பட்டோர் நிவாரண நிதியாக மொத்தம் ருபாய். 3,00,000/-
- ஆணைக்காரன்சத்திரம் காவல் சரகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் இறந்த கவிபாலன் என்பவரது மனைவி திருமதி. கவிதா என்பவருக்கு பாதிக்கப்பட்டோர் நிவாரண நிதியாக மொத்தம் ரூபாய். 3,00,000/-
- பூம்புகார் காவல் சரகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் இறந்த தமிழ்வாணன் என்பவரது மனைவி திருமதி. கல்வி, மகன் தேவா, மகன் சஜி மற்றும் தாயார் திருமதி. ஏலாச்சி ஆகியோருக்கு பாதிக்கப்பட்டோர் நிவாரண நிதியாக மொத்தம் ருபாய். 3,00,000/-
- பாலையூர் காவல் சரகத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் இறந்த செந்தில்குமார் என்பவரது மனைவி சித்ரா, மகன் அருண்குமார், மகள் காயத்ரி ஆகியோருக்கு பாதிக்கப்பட்டோர் நிவாரண நிதியாக மொத்தம் ரூபாய். 3,00,000/- காசோலையாக வழங்கப்பட்டது
0 Comments