மயிலாடுதுறை – மே -23,2024
Newz – webteam

மயிலாடுதுறை மாவட்டம், ஆயுதப்படையில் பணிபுரிந்த கமலி த/பெ. காமராஜ், மாவூர், சென்னை ஆவடியில் உள்ள த.சி.கா 5-ம் அணியில் தங்கி தமிழ்நாடு காவல்துறை மகளிர் கால்பந்து அணிக்காக விளையாடி வந்தவர் கடந்த 10.05.2024 ம் தேதி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்தவர் 12.05.2024 ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இவரது குடும்பத்தினருக்கு உதவும் வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் சேர்ந்து ரூபாய் 2,59,000/- ரொக்க தொகை நிதியுதவியாக இறந்து போன பெண் காவலர் கமலியின் பெற்றோர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்ககினார்
0 Comments