நாகப்பட்டினம் -ஜீன் 26,2024
Newz -webteam
நாளை சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாகை அக்கரைப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டது
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாளை சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு போதை பொருள்கள் அளிக்கக்கூடிய தீங்கினை எடுத்துரைக்கும் வகையில் காவல்துறையினரால் விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்தப்பட்டது.
அதிலும் குறிப்பாக நாகை அக்கரைப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ. கா.ப கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பள்ளிக் குழந்தைகளிடம் பேசும்போது கூறியதாவது தயவுசெய்து யாரும் போதைப் பொருட்களை பயன்படுத்தாதீர்கள் ஒருமுறை பயன்படுத்திட்டா திரும்பத் திரும்ப எடுத்துக்க தோணும் அப்புறம் போதைக்கு அடிமையை உங்க அழகான வாழ்க்கையை இழந்துடாதீங்க மேலும் போதை பழக்கத்துக்கு எதிராக ஏராளமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் காவல்துறையினரால் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
இருந்தும் போதை பொருட்களை கட்டுப்படுத்த முடியவில்லை ஏனென்றால் தகுந்த விழிப்புணர்வு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். போதை பழக்கத்தால் சமுதாயத்தில் மரியாதை குறையும். தங்கள் வாழ்க்கை சீர்கெடும் முதலில் பள்ளி மாணவ மாணவிகள் போதை பொருட்களுக்கு எதிரான சிந்தனைகளை கொண்டிருக்க வேண்டும்.
இதை உணர்ந்து ஒவ்வொரு மாணவர்களும் தங்களை சுற்றி உள்ளவர்களிடம் போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தொடர்ந்து , போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன் விழிப்புணர்வு நோட்டிஸ்கள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்
இந்நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள் கலந்துக் கொண்டு போதைப் பொருளுக்கு எதிராக உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மேலும் நாகை காவல்துறையின் சார்பாக மாவட்டம் முழுவதும் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
0 Comments