திருநெல்வேலி – மார்ச் -26,2025
Newz -webteam



போதை ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கோடைகாலம் தொடங்கியதை முன்னிட்டு போக்குவரத்து காவலர்களுக்கு சோலார் தொப்பி, குளிர்பானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகர காவல்துறை மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் போதை ஒழிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி இ.கா.ப., தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையர்கள் (மேற்கு) V.கீதா (கிழக்கு) V.வினோத் சாந்தாராம் அவர்கள் (தலைமையிடம்) திரு.S.விஜயகுமார் ஆகியோர் கலந்துகொண்டு போதை பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கி உறுதிமொழி ஏற்க செய்தார்
மேலும் போதை ஒழிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கையெழுத்து நிகழ்ச்சி நடைபெற்றது. சாலையில் மது அருந்தி வாகனம், செல்போன் உபயோகித்து வாகனம் ஓட்டினால் ஏற்படும் விபத்து குறித்து மாணவர்கள் நடித்து காட்டினார்கள். (மது அருந்தி பயணம் சாலையில் மரணம்)
கோடைகாலம் தொடங்கியதை முன்னிட்டு போக்குவரத்து காவலர்களுக்கு வெப்பத்தை தாங்க கூடிய சோலார் தொப்பிகளை வழங்கியதோடு கோடை வெப்பத்தை தணிக்க நீர் மோர் மற்றும் சர்பத் வழங்கி கோடைகாலத்தில் நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து அறிவுரை வழக்கினார்
உடன் காவல் துறையினர், பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள், இளைஞர் செஞ்சிலுவை சங்கம், நெடுஞ்சாலைத்துறை, காவிரி மருத்துவமனை, மக்கள் கல்வி அறக்கட்டளை, அகமகிழ் கலையகம் சேர்ந்த பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
0 Comments