ஆவடி – மே -10,2025
Newz – Webteam



ஆவடி காவல் ஆணைரகத்தின் போதை தடுப்பு விழிப்புணர்வு
கிரிக்கெட் தொடரின் துவக்க விழா
தமிழ்நாடு முதலமைச்சர் “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” உருவாக்கிட வேண்டும் என இலக்கினை நிர்ணயித்தார்.
தமிழ்நாடு அரசின் நோக்கத்தினை அடைந்திட ஆவடி காவல் ஆணையரகம் சார்பாக போதைப் பொருட்களின் பயன்பாட்டிற்கு எதிராக பல்வேறு தடுப்பு மற்றம் விழிப்புணர்வு நடவடிக்கைகள் காவல் ஆணையாளர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக இன்று 10.05.2025ம் தேதி ஆவடி காவல் ஆணையரகம் சார்பாக இளைஞர்களிடையே போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கடந்த ஆண்டின் தொடர்ச்சியாக, இரண்டாவது முறையாக 2025ம் ஆண்டின் APC CUP SEASON -2 போதை தடுப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் தொடரின் துவக்க விழாவானது காவல் ஆணையாளர் சங்கர், இ.கா.ப. அவர்களின் தலைமையில் ஆவடி காவல் ஆணையரக ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.
இதில் கூடுதல் ஆணையாளர், துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பலர் கலந்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியின் துவக்கமாக 80 அணிகளை சேர்ந்த விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. தொடர்ந்து, போதைப் பொருட்கள் ஒழிப்பு உறுதி மொழி விளையாட்டு வீரர்களால் காவல் ஆணையார் முன்னிலையில் ஏற்கப்பட்டது.
இதனை தொடர்ந்து போதை பழக்கங்களால் ஏற்படும் தீமைகள் குறித்து போட்டிகளில் பங்கேற்கும் இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, போதைப்பொருட்களுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து காவல் ஆணையாளர் எடுத்துரைத்தார்.
பொதுமக்களான இளைஞர்கள் சார்பில் 64 அணிகள் மற்றும் காவல் துறை மற்றும் அரசு பணியாளர்களின் 16 அணிகளும் என மொத்தம் 80 அணிகள் பங்கேற்கும் போதை தடுப்பு விழிப்புணர்வு மாபெரும் கிரிக்கெட் தொடரின் போட்டிகளை காவல் ஆணையாளர் திரு.கி.சங்கர். இ.கா.ப., அவர்கள் ஆயுதப் படை மைதானத்தில் தொடங்கி வைத்தார்கள். இறுதியாக காவல் அதிகாரிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் போதை பழக்கத்திற்கு எதிராக கையெழுத்திட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்
இத்தொடரின் இறுதி போட்டிகள் 18.05.2025ம் தேதி அன்று நடைபெறும். வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசு ரூ.25000/- இரண்டாம் பரிசு ரூ.15000/- மூன்றாம் பரிசு ரூ.10000/- நான்காம் பரிசு ரூ.7500, மற்றும் இறுதி போட்டியின் சிறந்த வீரர் பரிசு ரூ.3000/- தொடரின் சிறந்த வீரர் பரிசு ரூ.10000 என பரிசு தொகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
0 Comments