திண்டுக்கல் – அக் -09,2023
newz – webteam
இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 04 நபர்களில் 03 நபர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை ரூ.23,000/- அபராதமும் மற்றொரு நபருக்கு ஆயுள் தண்டனை ரூ.13,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2012-ம் ஆண்டு சேடப்பட்டி பகுதியைச் சேர்ந்த கண்ணன் மற்றும் பெரியசாமி என்பவர்களை குடும்ப பிரச்சினை காரணமாக கொலை செய்த வழக்கில் அவரது உறவினர்களான செல்வராஜ்(61) செல்லப்பாண்டி(32) முத்துக்குமார்(43) மற்றும் தூங்கான் (எ) ஊராத்தேவர்(76) ஆகிய 04 நபர்களையும் தாடிக்கொம்பு காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.பாஸ்கரன் அறிவுறுத்தலின்படி தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் அவர்கள், நீதிமன்ற தலைமை காவலர் சாந்தி மற்றும் அரசு வழக்கறிஞர் சூசை ராபர்ட் அவர்களின் சீரிய முயற்சியால் இன்று திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி குற்றவாளிகள் செல்வராஜ், செல்லப்பாண்டி, தூங்கான் (எ) ஊராத்தேவர் ஆகிய 03 நபர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.23,000/- அபராதமும், முத்துக்குமார் என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.13,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்
0 Comments