திருநெல்வேலி – பிப் -03,2024
Newz – webteam
திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படையில் காவல் துறையினருக்கு கண் மருத்துவ பரிசோதனை முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படையில் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து காவலர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தினருக்கும் இலவச கண் பரிசோதனை முகாம் இன்று நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற கண் மருத்துவ முகாமில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்., காவல்துறையினர் அனைவரும் தங்கள் கண்களை நல்லமுறையில் பேணிக்காக்க வேண்டும் எனவும் கண்களை ஆரோக்கியமாக வைக்க நல்ல உணவு வகைகளை உட்கொண்டு, நமது உடலைப் பேணிக் காக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசந்திரன் , திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் , மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுஜாதா அவர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments