திருநெல்வேலி – அக் -19,2023
newz – webteam
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா ராதாபுரம் தெற்கு தெருவை சார்ந்த மணி அவர்களின் குமாரர் முத்தழகன் என்பவர் சென்னையில் இருந்து வள்ளியூருக்கு ஆம்னி பஸ்ஸில் ரூபாய் 1835/- கொடுத்து 24.01.2021 அன்று பயணம் செய்துள்ளார்
அரசு ஆணையின்படி சென்னையில் இருந்து வள்ளியூருக்கு ரூபாய் 668/- மட்டுமே வசூல் செய்திருக்க இருக்க வேண்டும்.
கூடுதலாக 1167/- ரூபாய் வசூல் செய்தது , மேலும் வள்ளியூர் பேருந்து நிலையத்தில் இறக்கி விட ஒப்பந்தம் செய்துவிட்டு வள்ளியூர் பைபாஸ் ரோட்டில் இறக்கிவிட்டதால் முத்தழகன் மிகுந்த மன உளைச்சலுக்கும் ஆளாகி விட்டதால் வழக்கறிஞர் பிரம்மா மூலம் திருநெல்வேலி நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார்
இதனை விசாரணை செய்த ஆணையத்தலைவர் கிளாடஸ் டோன் பிளசிங் தாகூர் மற்றும் உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர் வள்ளியூர் பேருந்து நிலையத்தில் இறக்கி விடாமல் பைபாஸ் ரோட்டில் இறக்கி விட்டது சேவை குறைபாடு என்றும் அதனால் முத்தழகனுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூபாய் 25,000/- நஷ்டஈடு ஆக வழங்க வேண்டும் என்றும் வழக்கு செலவுக்கு ரூபாய் 2,000 /-ம் சேர்த்து ₹27,000/-ம் வழங்க வேண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளார்
0 Comments