ஆவடி -பிப் -12,2025
Newz -webteam



ஆவடி காவல் ஆணையரகம்
வாகன ஓட்டுனர்களுக்கான இலவச கண் பரிசோதனை
சிறப்பு முகாம்
சாலை விபத்துகளை தடுக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் நோக்கில் பல்வேறு வகையான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆவடி காவல் ஆணையரகம் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக இன்று 11.02.2025-ம் தேதி ஆவடி காவல் ஆணையரகம் மற்றும் சங்கர் நேத்ராலயா கண் மருத்துவமனை & அறக்கட்டளை இணைந்து நடத்திய வாகன ஓட்டுனர்களுக்கான இலவச கண் பரிசோதனை சிறப்பு முகாம் காவல் ஆணையாளர் திரு.கி. சங்கர், இ.கா.ப., அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு, திருமுல்லைவாயில், SM நகர், போலீஸ் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காவல் ஆணையாளர் அவர்கள் விபத்துக்களை தடுப்பது மற்றும் பாதுகாப்பு உறுதி செய்வது குறித்து பின்பற்ற வேண்டிய சாலை விதிகள் மற்றும் அறிவுரைகளை வாகன ஓட்டுனர்களுக்கு வழங்கினார்கள்.
இக்கண் பரிசோதனை சிறப்பு முகாமில் சங்கர் நேத்ராலயா கண் மருத்துவமனையைச் சார்ந்த மருத்துவ குழுவினர் நவீன உபகரணங்களைக் கொண்டு ஆவடி, பட்டாபிராம், பூந்தமல்லி, SRMC, செங்குன்றம், அம்பத்தூர், மணலி, எண்ணூர், பொன்னேரி ஆகிய காவல் சரகங்களைச் சேர்ந்த லாரி மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் என சுமார் 170 வாகன ஓட்டுனர்களுக்கு மருத்துவர்களால் கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, குறைபாடு உள்ள வாகன ஓட்டுநர்களுக்கு இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது. மேலும் கண்புரை உள்ளிட்ட குறைபாடு உள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டது.
இம்முகாமின் துவக்க விழாவில் ஓய்வு பெற்ற காவல்துறை இயக்குநர் திருமதி.அர்ச்சனா ராமசுந்தரம் அவர்கள், (Former Member Lokpal of India), கூடுதல் காவல் ஆணையாளர் திருமதி.கே.பவானீஸ்வரி,இ.கா.ப., அவர்கள், போக்குவரத்து பிரிவு காவல் துணை ஆணையாளர் திரு.அன்பு அவர்கள், டாக்டர்.ராஷிமா, தலைமை மருத்துவர், சங்கர் நேத்ராலயா கண் மருத்துவமனை அவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆவடி காவல் ஆணையரகம்
வாகன ஓட்டுனர்களுக்கான இலவச கண் பரிசோதனை
சிறப்பு முகாம்
சாலை விபத்துகளை தடுக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் நோக்கில் பல்வேறு வகையான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆவடி காவல் ஆணையரகம் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக இன்று 11.02.2025-ம் தேதி ஆவடி காவல் ஆணையரகம் மற்றும் சங்கர் நேத்ராலயா கண் மருத்துவமனை & அறக்கட்டளை இணைந்து நடத்திய வாகன ஓட்டுனர்களுக்கான இலவச கண் பரிசோதனை சிறப்பு முகாம் காவல் ஆணையாளர் திரு.கி. சங்கர், இ.கா.ப., அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு, திருமுல்லைவாயில், SM நகர், போலீஸ் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காவல் ஆணையாளர் விபத்துக்களை தடுப்பது மற்றும் பாதுகாப்பு உறுதி செய்வது குறித்து பின்பற்ற வேண்டிய சாலை விதிகள் மற்றும் அறிவுரைகளை வாகன ஓட்டுனர்களுக்கு வழங்கினார்
.
இக்கண் பரிசோதனை சிறப்பு முகாமில் சங்கர் நேத்ராலயா கண் மருத்துவமனையைச் சார்ந்த மருத்துவ குழுவினர் நவீன உபகரணங்களைக் கொண்டு ஆவடி, பட்டாபிராம், பூந்தமல்லி, SRMC, செங்குன்றம், அம்பத்தூர், மணலி, எண்ணூர், பொன்னேரி ஆகிய காவல் சரகங்களைச் சேர்ந்த லாரி மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் என சுமார் 170 வாகன ஓட்டுனர்களுக்கு மருத்துவர்களால் கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, குறைபாடு உள்ள வாகன ஓட்டுநர்களுக்கு இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.
மேலும் கண்புரை உள்ளிட்ட குறைபாடு உள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டது.
இம்முகாமின் துவக்க விழாவில் ஓய்வு பெற்ற காவல்துறை இயக்குநர் திருமதி.அர்ச்சனா ராமசுந்தரம் அவர்கள், (Former Member Lokpal of India), கூடுதல் காவல் ஆணையாளர் பவானீஸ்வரி,இ.கா.ப., அவர்கள், போக்குவரத்து பிரிவு காவல் துணை ஆணையாளர் .அன்பு , டாக்டர்.ராஷிமா, தலைமை மருத்துவர், சங்கர் நேத்ராலயா கண் மருத்துவமனை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 Comments