தூத்துக்குடி -ஜீன் – 07,2024
Newz -webteam
ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காற்றாலை நிறுவனத்தில் இருந்த மின்விளக்கு கம்பங்களை திருடிய 3 பேர் உடனடியாக கைது – திருடப்பட்ட ரூபாய் 1,20,000/- மதிப்புள்ள 2 மின்கம்பங்கள் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் பறிமுதல்.
ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள தனியார் காற்றாலை நிறுவனத்தின் வளாகத்தில் மின்விளக்குகள் அமைப்பதற்காக மின்கம்பங்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 05.06.2024 அன்று இரவு மர்மநபர்கள் மேற்படி காற்றாலை நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த 2 மின்கம்பங்களை திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து அந்த தனியார் காற்றாலை நிறுவனத்தில் உதவி மேலாளராக பணிபுரியும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துராஜ் என்பவர் அளித்த புகாரின் பேரில் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் ஓட்டப்பிடாரம் மேலமங்கலம் பகுதியைச் சேர்ந்த சுடலைமாடன் மகன் ராபின்சிங் (24), ஓட்டப்பிடாரம் சங்கரராஜபுரத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் ராஜன் (26) ஆகிய இருவரும் சேர்ந்து மேற்படி மின்கம்பங்களை திருடி அதனை கேஸ் வெல்டிங் மூலம் சிறு துண்டுகளாக வெட்டி சரக்கு வாகனத்தில் எடுத்து சென்று முப்பிலிவெட்டி பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் முத்துக்குமார் (40) எண்பவரிடம் கொடுத்தது தெரியவந்தது.
இதனையடுத்து ஓட்டப்பிடாரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. விஜயகுமார் வழக்கு பதிவு செய்து மேற்படி எதிரிகளான ராபின்சிங், ராஜன் மற்றும் முத்துக்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து திருடப்பட்ட ரூபாய் 1,20,000/- மதிப்புள்ள 2 மின்கம்பங்கள் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments