நாகப்பட்டினம் – மே,30,2024
Newz – webteam
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொலை, கொள்ளை, கஞ்சா, கள்ளச்சாராய கடத்தல் மற்றும் விற்பளை ஆகியவை தொடர்பான வழக்குகள் மீது தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் குற்றவாளிகள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் இ.கா.ப பரிந்துரையின் படி நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்க்கிஸ் இ.ஆ.ப, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டதின் பேரில் குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக வேதாரணியம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சிவராஜா (40) த/பெ சிவாஜி, தெற்கு தெரு, கருப்பம்புலம் என்பலாது கொலை வழக்கில் தொடர்புடைய 1)தனுஷ்கோடி(36) த/பெ கோவிந்தன், வடமலை கரியாப்பட்டினம், Zசாம்ராஜ்24 த/பெ ராஜாஜி, திருப்பூண்டி 3)ஆனந்த் (27) த/பெ சித்திஸ்வான, சேலம், 4,அருள்பிரகாஷ்(34) த/பெ ஜியானந்தம். நாகப்பட்டினம், 5) திதையாளன்(34) த/பெ ராஜவேல், சேயம் 6) முருகானந்தம் (54) கோவிந்தசாமி, வேதாரண்யம். ஆகிய 6 நபர்களை வேதாரண்யம் காவல் துறையினர் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இவ்வாறு சிறப்புடன் செயல்பட்ட வேதாரணியம் காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ.காய அவர்கள் பாராட்டினார்
இதுபோன்ற கொலை, கொள்ளை. கஞ்சா, கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தல் ஆகிய குற்றச் செயல்களில் ஈடுபட்டால்
தொடர்ந்து குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்.
மேலும், இது போன்ற குற்ற செயல்களில் உங்களது ஊரிலும் யாரேனும் ஈடுபட்டால்
உங்கள் எஸ்பியிடம் பேசுங்கள் 8428103090 என்ற தொலைபேசி எண்ணில் புகார்
தெரிவிக்கலாம். புகார் தருபவர்களின் இரகசியம் பாதுகாக்கப்படும்.
0 Comments