திருச்சி – மே,30,2024
Newz -webteam
சுமை தூக்கும் தொழிலாளியை ஆபாசமாக பேசியும், கத்தி மற்றும் அரிவாளால் வெட்டி கொலை முயற்சி செய்த இரண்டு நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.
கடந்த 03.05.2024-ந்தேதி கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இ.பி ரோடு, மதுரை மைதானம் அருகில் நடந்து சென்ற ஒருவரை பின் தொடர்ந்து வந்த மூன்று நபர்கள் ஆபாசமாக திட்டியும், கத்தி மற்றும் அரிவாளால் தாக்கி கொலை முயற்சி செய்ததாக கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, விசாரணையில் மேற்கண்ட சம்பவத்தில் ஈடுபட்ட தாராநல்லூர் பகுதியை சேர்ந்த மாரிமுத்து வயது 26, த.பெ.முத்துராமலிங்கம் மற்றும் வாசுதேவன் வயது 21, த.பெ.ராமச்சந்திரன் ஆகிய இருவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மாரிமுத்து மீது காந்திமார்க்கெட் காவல்நிலையத்தில் பணம் வைத்து சூதாடியதாக ஒரு வழக்கு, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் எதிரி வாசுதேவன் மீது கோட்டை காவல்நிலையத்தில் ஒரு வழிப்பறி வழக்கு, அரியமங்கலம் மற்றும் காந்திமார்க்கெட் காவல்நிலையங்களில் பொது அமைதிக்கு தொல்லை கொடுத்தாக தலா ஒரு வழக்கு, நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு கொலை வழக்கு உட்பட 4 வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் இருப்பது தெரிய வந்தது.
எனவே மாரிமுத்து மற்றும் வாசுதேவன் ஆகிய இருவரின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு ஸ்ரீரங்கம் சரக காவல் உதவி ஆணையர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் .காமினி, இ.கா.ப., மேற்படி நபர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் அடைக்க ஆணையிட்டார்.
அதனை தொடர்ந்து அந்நபர்கள் மீது
பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், திருச்சி மாநகரில் அபாயகரமான ஆயுதத்தை பயன்படுத்தி கொலை முயற்சி சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையரால் கடுமையான எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
0 Comments