கோயம்புத்தூர் – ஜீலை – 18,2023
newz – webteam
ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற முதியவரை பத்திரமாக மீட்ட கோவை லைப் கார்ட்ஸ் குழுவினரை பாராட்டி வெகுமதி வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காவல் நிலைய பகுதியில் வசிக்கும் 70 வயது முதியவர் ஒருவர் குடும்பப் பிரச்சினை காரணமாக கடந்த 16.07.2023 அன்று பவானி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ராசன் தலைமையிலான லைப் காட்ஸ் குழுவினர் உடனடியாக ஆற்றில் குதித்து பரிசல் மூலமாக அவரை பத்திரமாக மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கடந்த ஐந்து மாதத்தில் மொத்தம் 96 நபர்களை மீட்டுள்ளனர். இச்செயலை பாராட்டும் விதமாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், இ.கா.ப., மேற்படி மேட்டுப்பாளையம் லைப் காட்ஸ் குழுவினரை இன்று மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அழைத்து அவர்களின் செயலை பாராட்டி வெகுமதி வழங்கினார்.
0 Comments