திருநெல்வேலி – அக் -30,2023
newz – webteam
ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாத நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் அக்டோபர் 29-ம் நாளை உலக சுகாதார அமைப்பு மற்றும் உலக ஸ்ட்ரோக் சொசைட்டி இணைந்து உலக பக்கவாத தினமாக அனுசரிக்க அறிவுறுத்தி உள்ளது. இதனையொட்டி, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி உயர் சிறப்பு மருத்துவமனை உள்வளாகத்தில் மூளை நரம்பியல் பிரிவு மற்றும் அவசரசிகிச்சைப் பிரிவு சார்பாக பக்கவாத நோய் விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி பாலன் துவக்கி வைத்தார். உதவி முதல்வர் சுரேஷ் துரை, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பாலசுப்ரமணியம், மூளை நரம்பியல் பிரிவு துறைத்தலைவர் டாக்டர். சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனித சங்கிலி நிகழ்ச்சியில் பாரா மெடிக்கல் மருத்துவப் பயிற்சி மாணவ மாணவிகள், சர்தார் ராஜா, இருதயஜோதி செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மூளை நரம்பியல் பிரிவு துறைத் தலைவர் டாக்டர் சரவணன் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனையின் இடையீட்டு கதிரியக்க மருத்துவப் பிரிவு துறைத் தலைவர் டாக்டர் சந்தோஷ் ஜோசப் கலந்து கொண்டு இந்தாண்டு கருப்பொருளான
ஒன்றாக நாம்..!பக்கவாதத்தை விட பெரியவர்கள் என்கிற தலைப்பில் கருத்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மூளை நரம்பியல் பிரிவு துறைத் தலைவர் பேசியது,
கழுத்தின் இரு பக்கங்கள் வழியாக தலைக்குச் செல்லும் கழுத்து தமனிகள், இதயத்தில் இருந்து, மூளைக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் நுண்ணிய ரத்தக் ரத்தக்குழாய்களில் ரத்த ஓட்டம் குறைதல் மற்றும் தடைபடும்போது, பிராண வாயு, ஊட்டச்சத்துக்கள் கிடைப்பது தடைபட்டு, மூளையின் சில பாகங்கள் செயல் இழந்து அதனால் உடலின் சில பாகங்களும் செயல் இழக்கின்றன. இதனை, பக்கவாதம் (ஸ்ட்ரோக்) என்கிறோம். மாரடைப்பு போன்று, இது மூளை அடைப்பு என சொல்லலாம். தலைவலி, பார்வை மங்குதல், திடீர் மயக்கம், கை, கால்களில் தளர்ச்சி, உணர்ச்சிக் குறைவு, மரத்துப் போதல், பேச்சுக்குழறல் போன்றவை இந்த நோய் தாக்குவதைக் காட்டும் உடனடி அறிகுறியாகும். ரத்த அழுத்தத்தை சீராக வைத்தல், எளிய உடற்பயிற்சி, சீரான உணவு, சந்தோஷமான சூழல், புகை, மது ஒழித்தல் போன்றவை இந்த நோயை வரவிடாமல் பாதுகாக்கும். மேலும், இதய நோய், சர்க்கரை குறைபாடு கொண்டவர்களையும் இந்நோய் அதிகம் தாக்கும். பக்கவாதத்தை ஒழிக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமே இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும் என கூறினார். இந்நிகழ்ச்சியில் சிறுநீரகப் பிரிவு துறைத் தலைவர் டாக்டர் ராமசுப்பிரமணியன், நெஞ்சகநோய் பிரிவு துறைத் தலைவர் டாக்டர். கிருஷ்ணமூர்த்தி, மனநல துறைப் பிரிவு பேராசிரியர் டாக்டர் ராமானுஜம், கதிரியக்கப் பிரிவு துறைத் தலைவர் டாக்டர் நான்சி டோரா, பொது மருத்துவ துறை பேராசிரியர்கள் டாக்டர் ரத்னகுமார், ராஜேஷ் கிம்ஸ் மருத்துவமனை மக்கள் தொடர்பு அதிகாரி முத்து குமரன், விவேக் மற்றும் மூளை நரம்பியல் பிரிவு மருத்துவர்கள் ஜாஸ்மின், ரேட்சல் சங்கரநாராயணன், அம்புரோஸ், ரவிச்சந்திரன், மற்றும் செவிலியர் கண்காணிப்பாளர்கள் முத்துபேச்சி, ஜோஸ்லின் மற்றும் செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர். மூளை நரம்பியல் பிரிவு உதவி மருத்துவர். சங்கரநாராயணன் நன்றியுரை கூறினார். நிகழ்ச்சியினை செவிலியர் பயிற்றுநர் செல்வன் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிகளை மூளை நரம்பியல் பிரிவு முதுகலை மருத்துவப் பயிற்சி பட்டபடிப்பு மாணவ, மாணவியர் சிறப்பாக செய்து இருந்தனர்.
0 Comments