மதுரை – செப் -11,2023
newz – webteam
இம்மானுவேல் சேகரனார் குருபூஜையில் லட்சம் பேர் பங்கேற்ற நிகழ்ச்சி பாதுகாப்பு போலீசாருக்கு பாராட்டு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனார் குரு பூஜை நேற்று முன்தினம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். மாநிலம் முழுவதிலும் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண், ஐஜி நரேந்திரன் நாயர் தலைமையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்த நிகழ்ச்சி முடிந்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். அதில் ஒரு சிறிய அசம்பாவிதமோ, விபத்தோ இல்லாமல் அமைதியான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்த அதிகாரிகளுக்கு உள்துறைச் செயலாளர் அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
0 Comments