கன்னியாகுமரி – நவ 10,2023
newz – webteam
கன்னியாகுமரி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் E.சுந்தரவதனம், IPS தலைமையில் இன்று மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், ,துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.
மேலும் கொலை வழக்குகள், வழிப்பறி குற்றவாளிகள், இரவு மற்றும் பகல் கன்னகளவு குற்றவாளிகள், போக்கிரிகள் மற்றும் திட்டமிட்டு செயல்படும் குற்றவாளிகள் ஆகியோர்களை தொடர்ந்து கண்காணித்து முறையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொடுங்குற்ற வழக்குகளில் விரைவில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தவர்கள், கொலை கொள்ளை வழக்குகளில் விரைந்து செயல்பட்டு குற்றவாளியை கைதுசெய்ததனிப்படையினர்,நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளை நிறைவேற்றுவதில் சிறந்த பங்களிப்பை ஆற்றியவர்கள்,நீதிமன்றத்தில் வழக்குகளை கோப்புக்கு எடுத்து விரைவில் முடித்திட திறம்பட செயல்பட்டவர்கள், CCTNS பிரிவில் சிறப்பாக செயல்பட்டவர்கள் ஆகியோருக்கு மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளர் .E.சுந்தரவதனம், IPS,. பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
0 Comments