திருப்பத்தூர் – ஜன -05,2024
Newz – webteam
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை
இன்று திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்.IPS வழிகாட்டுதலின்படி ஜோலார்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடமான ஜோலார்பேட்டை சந்திப்பில் குற்றங்களை தடுக்கவும் விபத்துக்களை குறைக்கவும் திருவண்ணமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரையின் நிதி உதவியில் சுமார் 3.00.000/- மதிப்புள்ள 06 அதி நவீன CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டு இன்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணதுரையால் துவக்கிவைக்கபட்டது
மேற்படி பொருத்தப்பட்ட கேமராக்கள் ஒரே சமயத்தில் அனைத்து திசைகளையும் தொலைவில் உள்ள நபர்களையும், பொருட்களையும் கூட தெளிவாக படம் பிடிக்கும் திறன் உடையது. மேலும் ஏஎன்பிஆர் வசதிகளை உள்ளடக்கியது என்பதால் குற்றத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் எளிதில் மற்றும் விரைவாக அடையாளம் காண உதவியாக இருக்கும். மேலும் மாவட்டத்தில் முக்கிய இடங்களில் இதே போன்று அதி நவீன கேமராக்கள் பொருந்த ஆவணம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், IAS. தேவராஜ் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் நல்லதம்பி திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், திருப்பத்தும் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில் . காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
0 Comments