திருநெல்வேலி -ஜீலை -02,2024
Newz -webteam
மூன்றடைப்பு அருகே முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் இளஞ்சிறார் உட்பட நான்கு பேர் கைது.
கடந்த 30.06.2024 அன்று மூன்றடைப்பு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட சூரப்பபுரம் ஊருக்கு வெளியே உள்ள காலி இடத்தில் நாங்குநேரி, இளந்தோப்பு, தெற்கு தெருவை சேர்ந்த முத்து செல்வன் (30) என்பவர் இறந்து கிடந்துள்ளார்.
இந்த இறப்பில் சந்தேகம் இருப்பதாக இறந்து போன முத்து செல்வனின் தந்தையான ராமலிங்கம் என்பவர் மூன்றடைப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் நாங்குநேரி குற்றப்பிரிவு. மீராள் பானு (பொறுப்பு) சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், இறந்து போன முத்து செல்வனுக்கும் இளந்தோப்பு, தெற்கு தெருவை சேர்ந்த பாலசேகர் (30) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இதன் காரணமாக பாலசேகரனின் தூண்டுதலின் பேரில் இளந்தோப்பு, வடக்கு தெருவை சேர்ந்த சுரேஷ் (20), நம்பிநகர், வடக்கு தெருவை சேர்ந்த பெருமாள் (24), மற்றும் ஒரு இளஞ்சிறார் ஆகியோர் சேர்ந்து முத்து செல்வனை கொலை செய்தது தெரியவந்தது.
மேற்படி காவல் ஆய்வாளர் அவர்கள் பாலசேகர், சுரேஷ், பெருமாள் ஆகிய மூவரையும் இன்று கைது செய்தும், ஒரு இளஞ்சிராரை கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்.
0 Comments