தூத்துக்குடி – ஜீன் -27,2025
Newz – Webteam


திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு வாகன நிறுத்தம் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப நேரில் சென்று ஆய்வு.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வருகின்ற 07.07.2025 அன்று கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
மேற்படி கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப இன்று திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கும்பாபிஷேகத்திற்கு வரும் வாகனங்கள் நிறுத்துவதற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும், வாகனம் நிறுத்தும் இடங்களில் இருந்து பொதுமக்கள் கோவிலுக்கு செல்லும் வழித்தடங்கள் குறித்தும் மற்றும் பக்தர்களின் அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது தூத்துக்குடி மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் யாழினி உட்பட சுகாதார அலுவலர்கள் மற்றும் திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.
0 Comments