திருநெல்வேலி – டிச -09,2023
Newz -webteam
திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கீழ முன்னீர்பள்ளம், அம்மன் கோவில் தோட்டம் பகுதியை சேர்ந்த வீரபத்திரன் (25) என்பவரை 07.12.2023 அன்று சிலர் சேர்ந்து முன்விரோதம் காரணமாக கொலை செய்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்., சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். மேற்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி, ஆயுதம் ஏந்திய காவலர்கள் அப்பகுதி முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டும், சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை விரைந்து கைது செய்ய 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்காணிப்பில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் 300 க்கும் மேற்பட்ட காவலர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். துணை காவல் கண்காணிப்பாளர் அப்பகுதியில் வாகன தணிக்கை, வாகனத்தில் சென்று ரோந்து செய்தல் போன்ற பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினரிடம் அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் வருபவர்களையும், அதிக நேரம் ஒரே இடத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நிற்பவர்களை கண்காணிக்கவும், விசாரிக்கவும், பிரச்சனை ஏற்படாத வகையில் பாதுகாப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். பொதுமக்கள் தங்களுடைய அன்றாட பணிகளை மேற்கொள்ள எவ்வித அச்சமுமின்றி இருக்க தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
0 Comments