சென்னை ஆவடி – ஜீன் -26,2023
newz – webteam
சூரிய சக்தி தானியங்கி சிக்னல் விளக்கு
ஆவடிபெருநகர காவல் கடந்த 01.01.2023 ஆம் தேதி முதல் துவங்கப்பட்டு பல்வேறு போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டங்களை முறையாக செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை திருப்பதி நெடுஞ்சாலையில் உள்ள 1) அயப்பாக்கம் சாலை சந்திப்பு 2)அம்பத்தூர் தொழிற்பேட்டை 2வது பிரதான சாலை சந்திப்பு 3) சோழம்பேடு சாலை மற்றும் பள்ளி சாலை சந்திப்பு மற்றும் அம்பத்துார் தொழிற்பேட்டை 1 வது பிரதான சாலை சந்திப்பு ஆகிய நான்கு இடங்களில் முழு தானியங்கி சூரிய சக்தி போக்குவரத்து சிக்னல் விளக்குகள் பொருத்தப்பட்டு இன்று செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சிரமமின்றி பயணம் செய்ய இயலும்.
மேற்படி சோலார் தானியங்கி சிக்னல்களுக்கு மின்சாரம் தேவையில்லை. 24 மணிநேரமும் சூரிய சக்தியில் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
இன்று அன்று ஆவடி காவல் ஆணையர் அவர்கள், நிர்வாக இயக்குனர், ZF Commercial Vehicle Control Systems India Ltd மற்றும் இதர அதிகாரிகள் முன்னிலையில் மேற்படி சோலார் தானியங்கி சிக்னல்களை மக்களின் பயன்பாட்டுக்காக துவக்கி வைத்தார். மேலும் புதிய சூரிய ஒளியில் இயங்கும் போக்குவரத்து சிக்னல்கள்
சென்னை திருப்பதி நெடுஞ்சாலையில் உள்ள 1)அம்பத்துார் டெலிபோன்
எக்ஸ்சேஞ்ச் சந்திப்பு 2) வி.ஜி.என் சாலை சந்திப்பு மற்றும் 3) அம்பத்துார் 3வது
பிரதான சாலை மற்றும் 2வது பிரதான சாலை சந்திப்புகளில் நிறுவப்படவுள்ளன.
0 Comments