கரூர் – ஜுலை -22,2023
newz – webteam
சிந்தாமணிபட்டி காவல் நிலைய சரக எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 18.07.2023 ம் தேதி இரவு நடந்த கொலை மற்றும் திருட்டு வழக்கில் கொலை குற்றவாளியை 24 மணி நேரத்தில் கண்டுபிடித்து கைது செய்த அலுவலர்கள் மற்றும் காவலர்கள் குழுவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் E.சுந்தரவதனம், IPS., பாராட்டினார்
கரூர் மாவட்டம், சிந்தாமணிப்பட்டி காவல்நிலைய சரகம் மத்தகிரி, பள்ளிகவுண்டணூர் கிராமத்தை சேர்ந்த கண்ணியம்மாள் என்பவர் கடந்த 18.07.2023 ம் தேதி அவரது தோட்டத்தில் சந்தேகமான முறையில் இறந்து கிடந்தது தொடர்பாக சிந்தாமணிப்பட்டி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. E.சுந்தரவதனம், IPS., உத்தரவுப்படி கூடுதல் காவல் கண்காணிப்பாளர், தலைமையிடம் அவர்கள் தலைமையில் குளித்தலை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் தோகமலை வட்டம், பாலவிடுதி, லாலாபேட்டை காவல்நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
எந்த துப்பும் கிடைக்காமலிருந்த இந்த வழக்கில் கிராம மக்கள் அனைவரிடத்திலும் நடத்தப்பட்ட விசாரணையில் அதே ஊரைச் சேர்ந்த முருகாயிடம் விசாரணை மேற்கொண்டதில் இறந்த கண்ணியம்மாளிடம் தான் வாங்கிய 3 சவரன் நகையை திரும்ப கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். மேலும் நகையை திரும்ப தரும்படி இறந்த கண்ணியம்மாள் தொடர்ந்து கேட்டுள்ளார். இதனால் சம்பவ இடத்தில் வைத்து அரிவாளால் வெட்டி கொலை செய்ததாக கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் எதிரி முருகாயி கைது செய்யப்பட்டும் அவரிடமிருந்து 3 சவரன் நகை மீட்கப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டார்.
இவ்வழக்கில் திறம்பட செயல்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் இவ்வழக்கின் உண்மை குற்றவாளியை விரைவில் கைது செய்தும், திருட்டு சொத்தை முழுமையாக மீட்ட .N.பிரேமானந்தன் ADSP HEADQUARTER, B.ஸ்ரீதர் DSP குளித்தலை, .R.ராஜ்குமார், INSPECTOR தோகைமலை, M. உமா மகேஸ்வரி INSPECTOR பாலவிடுதி , B.ஸ்ரீதர் INSPECTOR லாலபேட்டை, B.சையது அலி SI பசுபதிபாளையம், D.அகிலன் SI லாலபேட்டை , மற்றும் காவலர்களை உள்ளடக்கிய தனிப்படையினரை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் E.சுந்தரவதனம், IPS., அவர்கள் இன்று நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்து கவுரவித்துள்ளார்.
0 Comments