கன்னியாகுமரி -ஜீன் -23,202
Newz -webteam
பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வண்ணம் அதி பயங்கரமாக பைக் ரேஸில் ஈடுபட்ட இரண்டு இளஞ்சிரார்கள் மற்றும் அவர்களின் தந்தைகளின் மீது வழக்குப்பதிவு.
ஜூன் 22,
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட டதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில், பொதுமக்களுக்கும், அவர்களுக்கும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வண்ணம், அதிபயங்கரமாக இருசக்கர வாகனத்தை இயக்கி சாகசத்தில் ஈடுபட்ட பால்பண்ணை பகுதியை சார்ந்த ராஜன் என்பவரின் 17 வயது மகன் , வடசேரி ஒழுங்குனசேரி பகுதியை சார்ந்த மோகன் என்பவரது 17 வயது மகன்,
ஆகிய இரண்டு இளஞ்சிரார்கள் மீதும், ஓட்டுநர் உரிமம் இல்லாத இந்த இரு இளஞ்சிரார்களுக்கு வாகனத்தை கொடுத்து இக்குற்ற செயலுக்கு உடந்தையாக இருந்ததாக அவ்விருவரின் தந்தைகளின் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் (279, 336, 308 IPC r/w 184, 188 MV Act) கோட்டார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வாறு ஓட்டுநர் உரிமமின்றி தொடர்ந்து பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வண்ணம் வாகன சாகசத்தில் ஈடுபடும் நபர்கள் மீதும், செயலுக்கு உடந்தையாக இருந்ததாக அவர்களின் பெற்றோர் மீதும் வழக்கு செய்யப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. சுந்தரவதனம் IPS எச்சரித்தார். இவ்வாறு பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வண்ணம் இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர்களின் வாகன எண்ணுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக எண் 04652 220167 அல்லது100 க்கோ அழைத்து பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
0 Comments