கன்னியாகுமரி – ஜீன் – 07,2023
newz – webteam
கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 வருடம் ஒரே காவல் நிலையங்களில் பணிபுரிந்தவர்களுக்கு விருப்ப காவல்நிலையங்களுக்கு பணிமாறுதல். ஆயுதப்படையில் இருந்து தாலுகா காவல்நிலையங்களுக்கும் பணிமாறுதல். மாவட்ட காவல்கண்காணிப்பாளர் உத்தரவு
மாவட்டத்தில் 03 வருடங்களுக்கு ஒரே காவல் நிலையைங்களில் பணிபுரியும் காவலர்கள் பணி மாறுதலுக்கு அந்ததந்த காவல் நிலையங்களில் விருப்ப மனு அளித்திருந்தனர்.
அதன் பேரில் பணிமாற்றம் நியாயமான முறையில் நடைபெறும் பொருட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D. N. ஹரி கிரன் பிரசாத் IPS தலைமையில் தலைமையக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுப்பையா கன்னியாகுமரி துணை காவல் கண்கணிப்பாளர் ராஜா, நாகர்கோயில் துணை காவல் கண்காணிப்பாளர் நவீன் குமார், தக்கலை துணைக் காவல் கண்காணிப்பாளர் உதயசூரியன், குளச்சல் துணை காவல் கண்காணிப்பாளர் .தங்கராமன் ஆகியோர், மதுவிலக்கு துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகரன் மற்றும் தனிப்பிரிவு ஆய்வாளர் பெர்னர்ட் சேவியர், அலுவலக கண்காணிப்பாளர் ஆன்றனி சேவியர் , மற்றும் முகாம் எழுத்தர் றே ராஜ் ஆகியோர் அடங்கிய குழு இன்று 06-06-23 மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து கூட்டம் நடைபெற்றது. இக்குழு காவலர்கள் விருப்பதேர்வுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு 60 காவலர்களுக்கு பணி மாறுதல் வழங்கியுள்ளது.
மேலும் ஆயுதப்படையில்
இருந்து புதிதாக 65 காவலர்களுக்கு சட்ட ஒழுங்கு பணிக்கு தாலுகா காவல்நிலையங்களுக்கு பணிமாறுதல் அளிக்கபட்டுள்ளது.
இவ்வாறு நியமிக்கப்பட்ட காவலர்கள் தங்கள் பணிகளில் நேர்மையுடன் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தினார்.
0 Comments