திருநெல்வேலி – ஜன -10,2024
Newz – webteam
திருநெல்வேி மாநகரதின் 46 வது காவல் ஆணையராக முனைவர் மூர்த்தி இ.கா.ப இன்று பொறுப்பேற்றுகொண்டார். திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வருகை தந்து காவல்துறையின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டர் பின்னர் அவரது அலுவலகத்திற்கு சென்று கோப்பில் கையெழத்திட்டு இன்று அவர் முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார் இவரது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் வக்கம்பட்டிசாரந்தவர்.Msc ,MPhil,Ml,phd(law பயின்று உள்ளார்.
1998 ஆம் ஆண்டு குருப் 1 தேர்ச்சி பெற்று 1999 ஆம் ஆண்டு பயிற்ச்சி முடித்து காவல்துணைகண்காணிப்பாளராக புதுக்கோட்டை,மயிலாடுதுறை,கும்பகோணம்,தஞ்சாவூர்,திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய ஊர்களில் பணி புரிந்து உள்ளார்.2006 ஆண்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று நீலகிரி,புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பணி புரிந்து உள்ளார்.2007 ஆம் ஆண்டு காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று துணை ஆணையராக திருச்சி, சேலம், தாம்பரம், கோவை ஆகிய மாநகரங்களிலும்
காவல்கண்காணிப்பாளராக திருச்சி,கோவை,புதுக்கோட்டை, திருவாரூர் சிபிசிஐடி , சிறப்பு இலக்குப்படை ஆகிய சிறப்பு பிரிவில் பணி புரிந்து உள்ளார்.2009 ஆம் ஆண்டு இந்திய காவல் பணி ஐபிஎஸ் கிரேடு அந்தஸ்த்தை பெற்று 2023 ஆம் ஆண்டு டிஐஜியாக பதவி உயர்வு பெற்று காவல் இனை ஆணையராக தாம்பரத்தில் பணிபுரிந்தார். இவரது 26 ஆண்டுகள் காவல் பணியில் திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 5 ஆண்டு பணி புரிந்த அனுபவம் உள்ளவர்.திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனராக மாநகர காவல் அலுவலகத்தில் பொறுப்பேற்ற பிறகு போலீஸ் கமிஷனர் கூறியிருப்பதாவது மாநகரத்தில் சட்டம் ஒழுங்கு நிலமையும் போக்குவரத்துநெரிசல்களை கண்காணித்து சீர் செய்யபடும் , குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்
0 Comments