திருப்பத்தூர் – டிச -05,2023
newz – webteam
திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட சுமார் 8 லட்சம் மதிப்புள்ள 40 கிலோ கஞ்சா பறிமுதல் மாவட்ட காவல் துறையின் அதிரடி நடவடிக்கை.
இன்று திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் உட்கோட்டம் ஆம்பூர் கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாதனூர் பகுதியில் விஜயவாடாவில் இருந்து சேலத்திற்கு கஞ்சா கடத்தி வருவதாக ஆம்பூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாதனூரில் பேருந்தை நிறுத்தி சோதனை செய்ததில் குஜராத் மாநிலம் அனந்த் நகரத்தைச் சேர்ந்த அன்வர்பாய்முல்தானி-33 என்பவரிடம் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட சுமார் 8 லட்சம் மதிப்புள்ள 40 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டு அவர் மீது ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இச்சிறப்பான செயல் செய்த ஆம்பூர் உட்கோட்ட காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான், IPS., வெகுவாக பாராட்டினார்.
0 Comments