வேலூர் – நவ -13,2024
Newz -webteam
வேலூர் கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருடப்பட்ட 39
சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டது
வேலூர் மாவட்டம், வேலூர் கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சந்தன கொட்டாய் பகுதியில், கடந்த 07.11.2024-ம் தேதி, மணிமாறன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த பணம், நகைகள் திருடப்பட்டதாக வேலூர் கிராமிய காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவின் பேரில்,
அணைக்கட்டு உட்கோட்ட காவல் துணை காண்காணிப்பாளர் சாரதி, பள்ளிகொண்டா வட்ட காவல் ஆய்வாளர் சுப்பிரமணி மற்றும் வேலூர் கிராமிய காவல் உதவி ஆய்வாளர் சிலம்பரசன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர், சிறப்பு உதவி ஆய்வாளர் பாபு, தலைமைக்காவலர் ராஜேஷ்குமார், முதல்நிலை காவலர்கள் ஏழுமலை, முனிவேல், கன்னியப்பன் ஆகியோர்
, CCTV காட்சி பதிவுகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு, 12.11.2024-ம் தேதி எதிரி ராஜ்குமார், வ/31, த/பெ. ராமன், காவேரிப்பட்டினம், கிருஷ்ணகிரி மாவட்டம், என்பவரை கைது செய்து, எதிரியிடமிருந்து 39 சவரன் தங்கநகைகள் மீட்கப்பட்டு, எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
சமூக ஊடகப்பிரிவு, வேலூர் மாவட்டம்.
0 Comments