அரியலூர் -நவ -10,2024
Newz – Webteam
ஆன்லைன் வர்த்தக ஆசை காட்டி ரூபாய் 19.76 இலட்சம் மோசடி செய்த நபர் கைது
அரியலூர் மாவட்டம் அரியலூர் நகரத்தைச் சேர்ந்த சுந்தர்(43) என்பவருக்கு முதலில் முகநூல் மூலம் தொடர்பு கொண்டு, பின்பு செல்போன் எண்ணின் மூலம் டெலிகிராமில் தொடர்பு கொண்டும், மேலும் பல Telegram ID ளிலிருந்து தொடர்பு கொண்டும், லிங்க் அனுப்பி Forex Trading-ல் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் எனக் கூறி, ரூபாய் 19,76,480/-வங்கி கணக்கு மூலம் முதலீடு செய்ய வைத்து ஏமாற்றி உள்ளனர். வாதி கொடுத்த ஆன்லைன்
(www.cybercrime.gov.in) புகாரின் அடிப்படையில், இணைய காவல் குற்ற எண் 09/24 வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இது தொடர்பாக விசாரணையில், குற்ற செயலுக்காக பயன்படுத்திய வங்கி கணக்குகளில் இருந்த ரூபாய் 8,66,966/- முடக்கம் செய்யப்பட்டு வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் தொலைபேசி எண்களை ஆய்வு செய்ததில் எதிரியானவர் சென்னையில் தங்கி இருப்பது தெரிய வந்தது, மேலும் எதிரியின் வங்கி கணக்கில் கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா ஹரியானா, உத்தர பிரதேசம் மற்றும் கேரளா மாநிலங்களில் வங்கி பணப்பரிவர்த்தனை மோசடிக்காக பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்தது.
இதனையடுத்து எதிரியை கைது செய்ய வேண்டி, கூடுதல் காவல் தலைமை இயக்குனர்
சந்தீப் மிட்டல் இ.கா.ப., (இணைய குற்ற பிரிவு)
p அறிவுறுத்தலின்படியும், திருச்சி மண்டல காவல்துறைத் தலைவர்
கார்த்திகேயன் இ.கா.ப., அவர்கள், திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் .மனோகர் இ.கா.ப., ஆகியோர்களின் அறிவுரை படியும், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் அவர்களின் உத்தரவின்படியும், இணைய குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர்
ஈஸ்வரன் இ.கா.ப ஆலோசனையின் படியும், இணையக் குற்ற காவல் ஆய்வாளர் கவிதா அவர்களின் தலைமையிலான 5 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டு, சென்னை சென்று வேளச்சேரியைச் சேர்ந்த எதிரி சக்திவேல் (36/24) த/பெ சுந்தர்ராஜன் என்பவரை கைது செய்து, எதிரியிடமிருந்து செல்போன் -03, சிம் கார்டுகள்-09, காசோலை புத்தகம்-07, ஏடிஎம் கார்டுகள்-07 ஆபீஸ் சீல்-07 ஆகியன பறிமுதல் செய்யப்பட்டு, மேலும் விசாரணைக்கு பின்னர் எதிரி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
0 Comments