தென்காசி – 23,2023
newz – webteam
1 பெண் காவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டல் விடுத்த நபர் கைது
சுரண்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முஸ்லிம் தொடக்கப்பள்ளி அருகே பெண் முதல்நிலைக் காவலர்கள் ராஜேஸ்வரி மற்றும் தஅன்பரசி ஆகியோர் ரோந்து பணியில் இருந்தபோது பாண்டி (எ) பாண்டியராஜ் என்பவர் அவர்களை வழிமறித்து இந்த தெருவிற்குள் நீங்கள் வரக்கூடாது என்றும் வந்தால் கல்லை கொண்டு எரிந்து கொலை செய்து விடுவேன் என்றும் அரசு பணியை செய்யவிடாமல் தடுத்து மிரட்டல்விடுத்துள்ளார். இதுகுறித்து பெண் முதல்நிலைக் காவலர் ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் அலெக்ஸ் மேனன் அவர்களை மேற்படி பிரச்சனையில் ஈடுபட்ட சமுத்திரம் என்பவரின் மகன் பாண்டி (எ) பாண்டியராஜன்(34) மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். மேலும் அதே போல்
- பெண்ணைத் தாக்கி மிரட்டல் விடுத்த நபர் கைது
அய்யாபுரம் காவல் நிலைய எல்கைகுட்பபட்ட கைப்படம் பகுதியில் வசித்து வரும் சுந்தரி என்பவர் தனது வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த அவரின் கணவரான குருசாமி என்பவர் தனது நண்பரான கார்த்திக்குகள்ளத்தியான் தூண்டுதலின் பேரில் தனது மனைவியை கைகளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சுந்தரி383 அய்யாபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் திரு. முருகன் அவர்கள் மேற்படி பிரச்சனையில் ஈடுபட்ட பெரியசாமி என்பவரின் மகன் குருசாமி மற்றும் முருகன் என்பவரின் மகன் கார்த்திக் கள்ளத்தியான்(28) ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து கார்த்திக் கள்ளத்தியான் என்பவரை கைது செய்து நீதிமன்ற
காவலுக்கு உட்படுத்தினார்.
தென்காசி மாவட்டத்தில் இன்று மது பாட்டில்களை சட்ட விரோதமாக
விற்பனை செய்ததாக 5 நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து
விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 106 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இன்று தென்காசி மாவட்டத்தில் சாலை விதிமுறைகளை மீறியதாக 727
மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 07 வாகனங்கள் பறிமுதல்
செய்யப்பட்டுள்ளது.
0 Comments