சென்னை – ஆகஸ்ட் -10,2023
news – webteam
- இந்தியாவிலேயே முதன்முறையாக பெண் சிறைவாசிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க்
டிஜிபி அமரேஷ் புஜாரி முன்னிலையில் அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்
இந்தியாவிலேயே முதன்முறையாக பெண் சிறைவாசிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க்கை சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி முன்னிலையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்.
தமிழக சிறைத்துறை டிஜிபியாக அமரேஷ் புஜாரி பொறுப்பேற்றதும் சிறைகளில் பல்வேறு சீர்த்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை சிறைவாசிகளின் சீர்திருத்தம் மற்றும் மறுவாழ்விற்கென கல்வி. திறன் மேம்பாடு தொழிற்கல்வி, தொழிற்கூட பயிற்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
சிறை அங்காடிகளின் நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்தும் விதமாக மத்திய சிறை, புழல், வேலூர், கோயம்புத்தூர், பாளையங்கோட்டை மற்றும் பார்ஸ்டல் பள்ளி, புதுக்கோட்டை ஆகிய 5 சிறை வளாகத்தில் பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையங்கள் தமிழ்நாடு சிறைத்துறையால் இந்தியன் ஆயில் கார்பரேசன் நிறுவனத்துடன் இணைந்து நடத்த அரசால் ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டு, இந்த பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையங்கள் “ப்ரீடம் ஃபில்லிங் ஸ்டேசன்” (Freedom Filling Station) என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றன.
31.03.2023 வரை அனைத்து ப்ரீடம் பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையங்களின் மொத்த விற்பனை ரூ. 847.31 கோடி, லாபம் ரூ. 23.94 கோடி மற்றும் சிறைவாசிகளின் ஊதியம் ரூ. 2.37 கோடி மற்றும் புழல் ப்ரீடம் பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையத்தின் 31.03.2023 வரையிலான மொத்த விற்பனை ரூ.218.23 கோடி, மொத்த இலாபம் ரூ.5.64 கோடி மற்றும் சிறைவாசிகளின் ஊதியம் ரூ.45.83 லட்சம் ஆகும்.
சென்னை புழல் மத்திய சிறை. புழல் அம்பத்தூர் சாலை, மத்திய சிறை, கோவை பாரதியார் சாலை, மத்திய சிறை. திருச்சி காந்தி மார்க்கட். மத்திய சிறை. திருச்சி விமான நிலைய சாலை, மத்திய சிறை. மதுரை மற்றும் மத்திய சிறை. சேலம் ஆகிய 6 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் நிறுவிட அரசாணை வழங்கப்பட்டது.
இவற்றில் இந்திய சிறைகளில் முதல் முறையாக முழுவதும் பெண் சிறைவாசிகளால் நிர்வகிக்கப்படும் வகையில் புழல், அம்பத்தூர் சாலையில், புழல் பெண்கள் தனிச்சிறை அருகில் புதிதாக கட்டப்பட்ட “ப்ரீடம் பெட்ரோல் விற்பனை நிலைய” (Freedom Filling Station)-த்தை இன்று 10.08.2023 சட்டம், நீதி, சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை அமைச்சர் ரகுபதி அவர்கள் திறந்து வைத்தார். வைத்தார். இந்தப் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் 30 பெண் சிறைவாசிகள் பணிபுரியவுள்ளனர். இவர்கள் மாத ஊதியமாக தலா ரூ. 6,000 பெறுகின்றனர். பெட்ரோல் பங்க் திறப்பு விழாவில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை தலைமை இயக்குநர் அமரேஷ் புஜாரி, ஐ.ஓ.சி.எல். நிர்வாக இயக்குனர் மற்றும் மாநில தலைவர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, அசோகன், சிறைத்துறைத் துணைத்தலைவர்கள் (தலைமையிடம்) கனகராஜ், முருகேசன், மத்திய சிறை-1 கண்காணிப்பாளர் நிகிலா நாகேந்திரன், புழல், மத்திய சிறை-II கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ். ஐ.ஒ.சி.எல். அலுவலர்களான மாநில சில்லறை வணிகத் தலைவர்- ராஜேந்திரா, மாநில சில்லறை வணிகத் தலைவர்- மாநிலப் தலைமை பொறியாளர் இளமாறன், சென்னை மண்டல சில்லறை வணிக மேலாளர் முத்துக்குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்
0 Comments