திருநெல்வேலி -ஜன -12,2025
Newz -webteam
திருநெல்வேலி மாநகரம் மற்றும் மாவட்டத்தை சேர்ந்த நபர்கள் ஈடுபடும் குற்ற செயல்கள் மற்றும் அவர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதிலும் மாநகரம் மற்றும் மாவட்ட காவல்துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர். இன்று மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் வைத்து, மாநகர காவல் ஆணையாளர்,சந்தோஷ் ஹதிமணி, இ.கா.ப., திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன்
, மாநகர காவல் துணை ஆணையாளர்கள் .கீதா,வினோத் சாந்தாராம், மற்றும் மாநகர, மாவட்ட, தனிப்படையினர் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது, மாநகரம் மற்றும் மாவட்ட காவல்துறையினர் நடைபெற்ற குற்றச் சம்பவங்கள் குறித்தும், அச்சம்பவங்களில் ஈடுபட்ட நபர்கள் குறித்தும், அவர்களது குற்ற பிண்ணனி குறித்தும், கருத்து பரிமாறப்பட்டதுடன், மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், ஆலோசனை நடத்தப்பட்டது.
குறிப்பாக, கொடுங்குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் குறித்தும், சாதி ரீதியாக செயல்படும் நபர்கள் குறித்தும், தயார் செய்யப்பட்டிருந்த பட்டியலில் உள்ள நபர்களின் மீது, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், ஏற்கனவே நடைபெற்ற குற்ற சம்பவங்கள் தொடராமல் இருக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும், அவர்களை 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் வைத்திருக்கவும்,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வெளியூரில் உள்ள நபர்கள் உள்ளூர் வரும் போது, தீவிரமாக கண்காணிப்பது குறித்தும், மாநகரம் மற்றும் மாவட்டத்தில் உள்ள குற்றவாளிகள் குறித்த தகவல்களை உடனடியாக பரிமாறி கொள்வது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
0 Comments