நாகப்பட்டினம் -ஆகஸட் -03,2024
Newz -webteam
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், இ.கா.பா உத்தரவின் பேரில் வெளிப்பாளையம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் பெண்ணை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்ற அடையாளம் தெரியாத 2 நபர்கள் 24 மணி நேரத்தில் அதிரடி கைது, மேலும் குற்றச்செயலுக்கு பயன்படுத்திய ஆட்டோ மற்றும் அரிவாள் பறிமுதல்…
நாகை மாவட்டம் வெளிப்பாளையம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட முத்து
மாரியம்மன் கோவில் தெருவில் R. ஈஸ்வரி (38) க/பெ ரமேஷ் அவர்கள் வசித்து வருகிறார்.இவர் 01.08.2024 அன்று இரவு கடைக்கு சென்று விட்டு திரும்பும் வழியில் பதிவெண்குறிப்பிடாத மஞ்சள் நிற ஆட்டோவில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் ஈஸ்வரியை
அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதனை அடுத்து அருகில் இருந்த
நபர்கள் அவரை மீட்டு ஒரத்துார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்குபரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார், தகவல்அறிந்த நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், இ.கா.ப.,
குற்ற சம்பவ இடத்திற்க்கு விரைந்து பார்வையிட்டு இவ்வழக்கில் சம்பந்தம்பட்ட
குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய இரண்டு தனிப்படைகள் அமைக்க உத்தரவு
பிறப்பித்தார்
இதனை தொடர்ந்து தனிப்படை காவல் துறையினர் நடத்திய விசாரணையில்இறந்தவரின் உறவினரான ராஜா (46) த/பெ முருகேசன், பொரவாச்சேரி மற்றும் அவருடையநண்பர் வினோத் என்கிற கருப்புசாமி (37) த/பெ ஒச்சதேவர், வெளிப்பாளையம் ஆகிய இரு
நபர்களும் குற்றசம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது மேற்படி குற்றவாளிகளை தனிப்படைகாவல்துறையினர் பிடிக்க முற்ப்பட்ட போது குற்றவாளிகள் தப்பிக்க முயன்று கீழேவிழுந்ததில் ராஜா என்பவருக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு நாகை அரசு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
மற்றும் அவருடைய நண்பர் கருப்புசாமியும் கைதுசெய்த தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தியபின்பு நீதிமன்ற காவலுக்குஅனுப்பட உள்ளனர். இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை காவல் துறையினருக்குநாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . ஹர்ஷ் சிங், இ.கா.ப.,தனது பாராட்டுகளை தெறிவித்துள்ளார்
0 Comments