திருநெல்வேலி – 06,2024,
Newz -webteam
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பானுமதி வயது:49. இவர் கங்கைகொண்டான் பகுதிக்கு அருகில் உள்ள துறையூரில் வசித்து வருகிறார். இவர் கணவரால் கைவிடபட்டவர் மற்றும் இவருக்கு 18 வயது நிரம்பிய ஒரு ஆண் மகன் உள்ளது. வருடம் பயின்று வருகிறார். அவர் பொறியியல் இரண்டாம் பானுமதி தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
03.08.2024 அன்று பானுமதி தனது காலை நேர பணிக்காக துறையூரில் பேருந்து நிறுத்தத்தில் இவரது நிறுவனத்தின் வாகனத்திற்காக காத்திருந்தபோது நான்கு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து இவர் மீது மோதியதில் இவருக்கு சுய நினைவின்றி தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு முதலுதவி பெற்ற பின் 04.08.2024 அன்று திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் 05.08.2024 அன்று பானுமதியின் மூளை செயலிழந்து இருப்பதை அவருடைய உறவினருக்கு தெரிவித்தனர்.
அவரது மகன் மற்றும் உறவினர்கள் தாமாக முன்வந்து அவரது உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முன்வந்தனர். அதன் அடிப்படையில் அவரது கல்லீரல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், அவரது சிறுநீரகம் ஒன்று திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், மற்றொன்று மதுரை அரசு இராஜாஜிமருத்துவமனைக்கும்,
அவரது கருவிழிகள் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் தானமாக அளிக்கப்பட்டது. பானுமதியின் உடல் 06.08.2024 அன்று காலை 10:30 மணியளவில் புதிய உடல்கூறியல் அரங்கிலிருந்து இறுதி மரியாதையுடன் அவரதுஉறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
0 Comments