திருநெல்வேலி – செப் -01,2025
Newz – Webteam



நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, குழந்தைகள் பிரிவு DEIC- RBSK மற்றும் அப்போலோ மருத்துவமனை மருத்துவர்களுடன் இணைந்து பிறவி இருதய குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான ஆய்வு கடந்த ஆகஸ்டு மாதம் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் மரு.ரேவதிபாலன் தலைமையில் நடைபெற்றது.
இம்முகாமில் நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த குழந்தைகள் பரிசோதிக்கப்பட்டதில் 15 குழந்தைகளுக்கு இருதய குறைபாடை இருப்பது கண்டறியப்பட்டு மேல்சிகிச்சைக்குபரிந்துரைக்கப்பட்டது. அக்குழந்தைகள் நான்கு குழந்தைகளுக்கு திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சையின்றி நவீன உபகரணங்களுடன் இதயவியல் பிரிவு மருத்துவர்கள் மற்றும் அப்போலோ மருத்துவர்கள் இணைந்து 17.09.2024 அன்று சிகிச்சை மேற்கொள்ளபட்டது.
(ASD) Device closure தனியார் மருத்துவமனையில் இச்சிகிச்சை மேற்கொள்ள 2 முதல் 3 இலட்சம் வரை செலவாகும். இங்கு முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது. அனைத்து குழந்தைகளும் சிகிச்சைக்குப்பின் நலமாக உள்ளனர். இது, மூன்றாவது முறையாக நமது மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் நவீன சிகிச்சையாகும். இருதய குறைபாட்டை குழந்தைகளுக்கு அதிகமான நவீன சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட மருத்துவமனை தமிழகத்தில் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
முதலிடம் வகிக்கிறது.
0 Comments