சென்னை – ஆவடி – செப் -17,2023
newz – webteam
இரவு ரோந்து பணியில் இணை ஆணையாளர்
ஆவடி காவல் ஆணையரங்கம் 16.09.2023 இரவு, காவல் இணை ஆணையாளர் டாக்டர். விஜயகுமார். இ.கா.ப குற்றங்களை தடுக்கும் நடவடிக்கையாக இரவு ரோந்து பணியை ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு பணியின் போது திறந்திருக்கும் கடைகள், சுற்றித்திரிந்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டார். சோதனைச் சாவடிகளில் வாகன தணிக்கை நடைபெறும் இடங்களில் காவலர்களின் வாகனத் தணிக்கை செயல்பாடுகளை கண்டறிந்து ஆலோசனை வழங்கினார். தனியார் பாதுகாப்பு காவலாளிகளிடம் பாதுகாப்பு குறித்த நடைமுறைகளை கேட்டறிந்தார். கள்ளச் சந்தைகளில் மதுபான விற்பனை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments