77வது “சுதந்திரத் தினத்தை” முன்னிட்டு தூத்துக்குடி தருவை மைதானத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே. செந்தில்ராஜ் இ.ஆ.ப தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி ஆயுதப்படை காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
77வது ‘சுதந்திர தினம்” தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கே. செந்தில்ராஜ் இ.ஆ.ப இன்று (15.08.2023) காலை 09.05 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
காவல் ஆய்வாளர் சுனைமுருகன் தலைமையில் தூத்துக்குடி ஆயுதப்படை காவல்துறையினரின் 1வது படைப்பிரிவின் கமாண்டராக உதவி ஆய்வாளர் நங்கையர் மூர்த்தி, 2வது பெண் காவலர்கள் படைப்பிரிவின் கமாண்டராக உதவி ஆய்வாளர் கௌசல்யா மற்றும் 3வது படைப்பிரிவின் கமாண்டராக உதவி ஆய்வாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்து, காவல்துறை அணிவகுப்பு மிக கம்பீரமாக நடைபெற்றது.
இதனையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோடிலிங்கம், தூத்துக்குடி ஊரக காவல் உதவி கண்காணிப்பாளர் சுரேஷ், திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சம்பத் ஆகியோர் உட்பட காவல்துறை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட 60 காவல்துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களின் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் அவர்களின் பாராட்டுச் சான்றிதழ் பெற்ற காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பாராட்டினார்.
0 Comments