திருநெல்வேலி -நவ -17,2024
Newz – Webteam
நிவேதா பிரியதர்ஷினி வயது 32 இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையம்கோட்டை உள்ள ஏனாதி நைனார் தெருவில் வசித்துவருகிறார் . இவர் கணவர் பெயர் சந்தானம், இவர் தனியார் கல்லூரில் பணியற்றிவருக்கிறார் மற்றும் இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும் உண்டு. இவர் வீரவநல்லூர் உள்ள தமிழ்நாடு கிராம வங்கியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இவர் பணிக்காக கடந்த 12.11. 2024 அன்று வீரவநல்லூர் சென்று கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு இவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இவரை அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மற்றும் மேல் சிகிச்சைக்காக 12 /11 /2024 அன்று திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்,
பின்பு 12 .11 .2024 அன்றே அவர்களின் சேந்த விருப்பத்தில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டர். பின்பு உடல்நிலை எந்த முன்னேற்றமும் இல்லாத காரணத்தினால் 16 .11 .2024 அன்று திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மிகவும் மோசமான நிலை உள்ளதாக தெரிவித்துள்ளனர் மற்றும் மூளை செயல்பாடு இருப்பதை கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது
. அந்த பரிசோதனைகள் அறிக்கையில் மூளைச்சாவு அடைந்துவிட்டார் என்பதை அவருடைய உறவினரிடம் மருத்துவர்கள் தெளிவாக எடுத்துரைத்தனர். பின்பு தாமாக முன்வந்து அவருடைய உறவினர்கள் கல்லீரல், சிறுநீரகங்கள் தானமாக அளிப்பதற்கு முன் வந்தனர். 17.11.2024 அன்று அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து உடற்கூறாய்வு செய்யப்பட்டு அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து மரியாதை செய்யப்பட்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
0 Comments