கன்னியாகுமரி – நவ -20,2024
Newz -webteam
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவில் போலீஸ் அக்கா திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய குமரி மாவட்ட காவல்துறையினர்.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் IPS அவர்கள் உத்தரவின்படி, மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் பாதுகாப்பு மற்றும் காவல்துறை தொடர்புக்கு போலீஸ் அக்கா என்ற திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒரு பெண் காவலர் என்று நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இதன் அடிப்படையில் குமரி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில், போலீஸ் அக்கா திட்டத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட பெண் காவலர்கள் சென்று கலந்துரையாடி மாணவிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து உடனுக்குடன் தெரியப்படுத்தும் விதமாக போலீஸ் அக்காவின் தொலைபேசி எண்ணை மாணவிகளுக்கு கொடுத்து, சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சிகளில் சைபர் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மோகன்தாஸ், நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் லலித்குமார் IPS, துணை காவல் கண்காணிப்பாளர்கள் சந்திரசேகரன், மகேஷ்குமார், பார்த்திபன், நல்லசிவம், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments