திருநெல்வேலி -செப் -23,2024
Newz -webteam
பங்கு சந்தையில் முதலீடு செய்த ரூபாய் 9 லட்சத்து 13 ஆயிரம் மோசடி செய்ததாக வழக்கு பதிவு.
திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குடியிருந்து வரும் ஓம் பிரகாஷ் (31) என்பவர் 27.11.2023-ஆம் தேதி தனது முகநூல் பக்கத்தை பார்த்துக் கொண்டிருந்த போது பங்கு சந்தை பற்றிய பதிவு வந்ததாகவும் அதை கிளிக் செய்வதில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்ற ஆசை வார்த்தை கூறியதன் பேரில் ரூபாய் 9,13,867/- அனுப்பியதாகவும் அதற்கு ரூ3,79,544/- மட்டும் திரும்ப கிடைத்ததாகவும் மீதி பணத்தை கேட்டதற்கு மேலும் பணம் அனுப்பினால் தான் பணம் திரும்ப கிடைக்கும் என்று கூறியதால் தான் ஏமாற்றம் அடைந்ததை உணர்ந்து 23-09-2024-ஆம் தேதி, திருநெல்வேலி மாநகர சைபர் கிரைம் பிரிவில் கொடுத்த புகார் பேரில் வழக்கு பதிவு செய்த காவல் ஆய்வாளர் சண்முகவடிவு மற்றும் போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்
0 Comments