ஆவடி -ஜன -07,2025
Newz -webteam
ஆவடி காவல் ஆணையரகம் மதுவிலக்கு பிரிவு தனிப்படையினர் சுமார்
6.5 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களுக்கு எதிராக ஆவடி காவல் ஆணையரகத்தில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. கடுமையான நடவடிக்கைகள்
இதன் தொடர்ச்சியாக, ஆவடி காவல் ஆணையரகம், மதுவிலக்கு பிரிவு தனிப்படையினருக்கு நசரத்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குட்கா பொருட்களை கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அம்பத்தூர் மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் KA 51 AK 8556 என்ற பதிவெண் கொண்ட கன்டெய்னர் லாரியை மடக்கி சோதனை செய்ததில், சாக்கு மூட்டைகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது
.
இதனையடுத்து லாரி ஓட்டுநரான எதிரி விக்னேஷ் (வ/27) த/பெ முருகன் A.K.மோட்டூர். திருப்பத்தூர் மற்றும் அவரது உதவியாளரான குமார் (வ:44) த/பெ சேட்டு, எண்.172, மாரியம்மன் கோயில் தெரு நடுகுப்பம், மரக்காணம் தாலுகா, விழுப்புரம் மாவட்டம் என்பவரை கைது செய்து குட்கா பொருட்களை கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் சுமார் 6.5 டன் எடைக்கொண்ட சுமார் ரூ.10 லட்சம் மதிப்புடைய தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட
குட்கா பொருட்களை எதிரி பெங்களுருவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தது தெரியவந்ததையடுத்தும் அவரதுவாக்குமூலத்தைப்பெற்று இதன் உரிமையாளரான செந்தில் @ கனகலிங்கம் வ/38, த/பெ பெரியநாடார், எண்.263.விஜயலஷ்மி நகர், ஐயப்பந்தாங்கல் என்பவரையும் கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. குட்கா பொருட்களை கடத்தி வந்த எதிரி மற்றும் அதன் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் இதுபோன்று குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களின் விநியோகம் கடத்தல் மற்றும் விற்பனைக்கு முக்கிய புள்ளியாக செயல்படும் நபர்களை கைது செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும். தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிகக்கைகள் தொடரும் எனவும் காவல் ஆணையாளர் எச்சரித்துள்ளார்.
0 Comments