மதுரை – நவ – 26,2024
Newz – Webteam


தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை பொது நூலக இயக்கம் சார்பில், மாவட்ட அளவில் நூலக இயக்கம் வளர முனைப்புடன் பணியாற்றியமைக்காக நூலக ஆர்வலர் விருது 2024” விருது மதுரை மாநகர ஆயுதப்படை வளாகத்தில் செயல்படும் வாசகர் வட்டம் கிளை நூலகம் பெற்றுள்ளது.
இந்நூலகத்தில் மக்கள் நன்கு பயன்படுத்தும் வகையில் நூலக வளர்ச்சியை மேம்படுத்தி நூலக விழிப்புணர்வை ஏற்படுத்திய மதுரை மாநகர ஆயுதப்படை நூலக பொறுப்பாளர் நூலகர் .மாரியம்மாள் மற்றும் வாசகர் வட்ட மதுரை மாநகர தலைவர் முத்துகிருஷ்ணன் ஆகியோரை பாராட்டும் விதமாக மதுரை மாநகர காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
0 Comments