
திருநெல்வேலி – ஆகஸ்ட் -08,2025
Newz – Webteam
தினசரி நாளிதழ் ஒன்றில் சிவில் வழக்குகளை பொறுப்பு காவல் ஆணையர் விசாரணை செய்ய உத்தரவிட்டதாகவும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்யாமல் எச்சரித்து அனுப்பியதாகவும், குற்றம் சாட்டப்பட்டவரையும் மதுரையை சேர்ந்த ரவுடியையும் பாளையங்கோட்டை காவல்துறையினர் சந்தித்து பேசியதாகவும் திருநெல்வேலி மாநகர காவல்துறையினரை பற்றிய செய்தி ஒன்றினை பிரசுரம் செய்துள்ளனர்.
(2) பாளையங்கோட்டை காவல் சரகத்தினைச் சேர்ந்த இருதரப்பினர்களுக்கிடையே நிலம் தொடர்பான பிரச்சனையில் இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொள்ள வாய்ப்புள்ளதாக கிடைத்த ரகசிய அறிக்கையின் அடிப்படையில் இரு தரப்பினர் மீதும் நிர்வாகத்துறை நடுவர் (வட்டாட்சியர் பாளையங்கோட்டை) மூலம் நன்னடத்தை பிணையம் பெற காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.
(3) மேலும் இந்த பிரச்சனையின் தீவிரம் கருதி திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் (பொறுப்பு ஆணையர் அல்ல) மற்றும் காவல் துணை ஆணையர் (கிழக்கு) ஆகியோர் நேரடியாக விசாரணை செய்து மேற்படி பிரச்சனைக்கு சம்பந்தப்பட்ட இடமானது சென்னை மாநகருக்கு உட்பட்டு இருந்தாலும் இருதரப்பினரும் பாளையங்கோட்டை காவல் சரகத்தில் வசித்து வருவதால் அவர்களுக்கிடையே மோதல் ஏற்படுவதை தடுக்கும் நோக்கத்தில் திருநெல்வேலி மாநகர காவல்துறையானது சட்டரீதியான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருவரையும் நிர்வாகத்துறை நடுவர் (வட்டாட்சியர் பாளையங்கோட்டை) அவர்கள் முன்பு ஆஜர்படுத்தி அவர்களிடமிருந்து நன்னடத்தை பிணையம் பெறப்பட்டுள்ளன.
(4) மேற்படி பிரச்சனை சம்பந்தமாக சட்டரீதியாக தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில், கிடைக்கப்பெறும் தகவல்களின் உண்மைதன்மையினை உறுதி செய்யாமல் தொழில்முறையற்ற செய்தியானது சம்பந்தப்பட்ட நாளிதழில் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. எனவே அந்த நாளிதழில் வெளியான மேற்படி செய்தியானது உண்மைக்கு புறம்பானது என தெரிவிக்கப்படுகிறது.
0 Comments