சேலம் – நவ -23,2023
newz – webteam
சேலம் மாநகர காவல்.
போலீசார் எனக்கூறி காங்கேயம் வியாபாரியை கடத்திய வழக்கு 4 பேரை விடுவித்து ரூ.60 லட்சம் பணத்தை பங்கு போட்ட போலீசார்” என்ற தலைப்பில் 28.11.2023 அன்று காலைக் கதிர் நாளிதழில் வெளியிடப்பட்ட செய்திக்கு சேலம் மாநகர காவல்துறை அலுவலம் மறுப்பு அறிக்கை.வெளியிட்டுள்ளது
சேலம் மாநகரம், இரும்பாலை காவல் நிலையத்தில் கடந்த 26.09.2023 அன்று, திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தை சேர்ந்த இளங்கோவன் மகன் வெங்கடேசன்(37) த/என்பவர், தான் கொண்டு வந்த ரூ.50 லட்சம் பணத்தை, போலீசார் போல் வந்த நபர்கள், வழிமறித்து, தன்னை கடத்தி, தன்னிடம் இருந்த பணத்தையும் எடுத்துச் சென்றுவிட்டதாக கொடுத்த புகாரின் அடிப்படையில், இரும்பாலை காவல் நிலைய குற்ற எண் 603/2023 u/s 120(B), 419, 420 IPC @ 120(B), 419, 420, 170, 365 IPC ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை நடந்து வருகிறது.
இவ்வழக்கில் தொடர்புடைய 1) கணேசன் @ ஆடிட்டர், 2) கோவில் பிச்சை @ குமார், 3) மோகன் பாரதி, 4) பிரகதிஸ்வரன், 5) முத்துமணி, 6) வினித்குமார், 7) நடராஜன், 8) ஜெகன்மோகன், 9) கோபி @ கோபிராஜா, 10) மகாலிங்கம், 11) சீனிவாசன், 12) சுஜாதா, 13) நரேஸ்குமார், 14) சுரேஷ்குமார், 15) ராகேஷ் 16) வேலு ஆகிய 16 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கில் எதிரிகளிடம் இருந்து இதுவரை ரூ.34 லட்சம் பணம் மற்றும் uwu 1) INNOVA Car (AP 31 AW 5328(, 2( SKODA Car (TN 37 DJ 5806( 3)( SWIFT Car (TN 37 BH 6469) ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் இவ்வழக்கில் தொடர்ந்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட நபர்களை சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக நேற்று வந்த நாளிதழில், சேலம் பதிப்பில் பக்கம் எண்: 7- ல் வெளியிடப்பட்ட செய்திகள், உண்மைக்கு புறம்பான, தவறான செய்திகளாகும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
0 Comments