மதுரை – செப் -14,2023
newz – rathnavel
“காணாமல் போன சுமார் 26 இலட்சம் மதிப்புள்ள 253 செல்போன்கள் மீட்பு”
மதுரை மாநகரில் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் காணாமல் போன 253 செல்போன்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு மதுரை மாநகர சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் 253 செல்போன்கள் மீட்கப்பட்டன.
கோவில் சரகம் -12, தெற்குவாசல் சரகம் – 13, திருப்பரங்குன்றம் சரகம் -08, அவனியாபுரம் சரகம் -07, திடீர்நகர் சரகம் -73, திலகர் திடல் சரகம் 05, தல்லாகுளம்: சரகம் 87, செல்லுார் சரகம் -17, அண்ணாநகர் சரகம் -31, மீட்கப்பட்ட செல்போன்கள் அதன் உரிமையாளர்களிடம் 14.09.2023ம் தேதி இன்று காலை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மதுரை மாநகர் காவல் ஆணையர் லோகநாதன் அவர்கள் மற்றும் மாநகர துணை ஆணையர்கள் தெற்கு, வடக்கு, தலைமையிடம் மற்றும் போக்குவரத்து ஆகியோர்கள் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் சுமார் 279-பவுன் தங்க நகைகள் மதிப்பு சுமார் 1,11,60,000/-(ஒரு கோடியே பதினொரு இலட்சத்து அறுபதாயிரம் மட்டும்) இருசக்கர வாகனம் 4, அதன் மதிப்பு சுமார் 2 இலட்சம், LAP-TOP -2, அதன் மதிப்பு சுமார் 50,000/-ம் மட்டும். மேற்கண்ட நகைகளை மீட்கப்பட்டு நீதிமன்றத்தின் மூலம் ஒப்படைக்கப்படவுள்ளது. இவைகளின் மொத்த மதிப்பு 1,14,10,000/- (ஒரு கோடியே பதினாங்கு இலட்சத்து பத்தாயிரம் மட்டும்). மேற்கண்ட தனிப்படையினரின் நற்செயல்களை காவல் ஆணையர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்
0 Comments