

ஆவடி – மார்ச் -18,2025
Newz – Webteam
SIDCO தொழில்பேட்டை கூட்டமைப்பின் கலந்தாய்வு கூட்டம்
இன்று ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் இ.கா.ப., தலைமையில், பூந்தமல்லி திருமழிசையில் உள்ள SIDCO தொழிற்பேட்டை கூட்டமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் திருமழிசை சிட்கோ தொழில்பேட்டையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், SIDCO தொழிற்பேட்டையில் இயங்கி வரும் தொழில் நிறுவனங்கள் சட்டவிரோத நபர்கள் மற்றும் அப்பகுதி மக்களால் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக தீர்வு காண்பது குறித்தும், அப்பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டு காவல் ஆணையாளர் அவர்களால் இப்பிரச்சனைகள் குறித்து தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்பட்டன
கலந்தாய்வுக் கூட்டத்தில் SIDCO தொழிப்பேட்டை கூட்டமைப்பின் நிர்வாகிகள், தொழிற்சாலையின் நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments