திருநெல்வேலி – நவ-01,2023
newz – webteam
விதிகளை மீறி அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்திய பேருந்துகளுக்கு அபராதம் விதித்த நெல்லை மாநகர காவல் துறையினர்
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் .C.மகேஸ்வரி இ.கா.ப உத்தரவின் பேரில் நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர்கள் ஆதர்ஷ் பசேரா இ.கா.ப (கிழக்கு) K.சரவணகுமார் (மேற்கு), G.S.அனிதா (தலைமையிடம்) ஆகியோர் வழிகாட்டுதலின் படியும், தமிழ்நாடு அரசு (RTO) போக்குவரத்துக்கு துறையினருடன் இணைந்து நெல்லை மாநகர பகுதியில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் இன்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்திய 18 பேருந்துகளிலிருந்து அவற்றை அகற்றி அபராதம் விதித்தனர்.
மேலும் நெல்லை மாநகர போக்குவரத்துக்கு காவல் உதவி ஆணையாளர் திரு.காமேஸ்வரன் அவர்கள், அரசு போக்குவரத்துக்கு துறை அதிகாரிகள், காவல் ஆய்வாளர் செல்லதுரை மற்றும் போலீசார் பேருந்து ஓட்டுநர்களிடம் இது போன்ற ஒலி மாசு ஏற்படுத்தும் ஹாரன்களை பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இதுபோன்ற அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்த கூடாது என்று அறிவுரைகள் வழங்கினார்
0 Comments